Recent Articles

Thursday 5 December 2013

ஜெயலலிதா அம்மா பேசினார்கள்

Thursday 5 December 2013 - 0 Comments


Wednesday 4 December 2013

கருணாநிதியுடன் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு: ஒருங்கிணைந்த ஆந்திராவிற்கு ஆதரவு கேட்டார்

Wednesday 4 December 2013 - 0 Comments

சென்னை, டிச.5-

ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பல்வேறு தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். நேற்று தமிழகம் வந்த அவர் சென்னை கோட்டையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். பின்னர் மாலை 5.30 மணியளவில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்திக்க அவர் கோபாலபுரம் வந்தார். 

அவரை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோர் வாசலுக்கே வந்து வரவேற்று வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் தி.மு.க. தலைவர் கருணாநிதியை அவர் சந்தித்து பேசினார். 

இந்த சந்திப்பு 1 மணிநேரம் நடந்தது. சந்திப்பு முடிந்து 6.30 மணிக்கு வெளியே வந்த ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி இந்தியா முழுவதும் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்துபேசி வருகிறேன். பாரதீய ஜனதா கட்சி தலைவர்களையும், கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசியிருக்கிறேன். இன்றைக்கு தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவையும், தி.மு.க. தலைவர் கருணாநிதியையும் சந்தித்து பேசியிருக்கிறேன். 

அவர்களிடம் நான் 3-வது அணி குறித்தோ? அரசியல் குறித்தோ? பேசவில்லை. ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தியே பேசினேன். இந்த விஷயத்தில் அ.தி.மு.க., தி.மு.க., எனது கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்களா? பாராளுமன்றத்தில் விவாதம் வரும் போது ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி அந்த கட்சிகள் எனது கோரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்குமா? என்பதை நீங்கள் தான் அவர்களிடம் கேட்க வேண்டும். இது குறித்து நான் எதுவும் சொல்ல முடியாது. 

ஆந்திரா மாநிலத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிப்பது குறித்து அரசியல் சட்ட திருத்தத்தின்கீழ் மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்க வேண்டும், மக்களின் கருத்துக்களை கேட்டு இருக்க வேண்டும். ஆனால் இவற்றில் எதையுமே அவர்கள் செய்யாமல் மாநிலத்தை பிரிக்க முன் வந்து இருக்கிறார்கள். இது ஆபத்தானது. இந்த தவறான முன் உதாரணம் மற்ற மாநிலங்களையும் பாதித்து விடும். தனி தெலுங்கானா வரும் என்று பிரதமர் கூறுகிறார். ஆனால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றாமல் சட்டம் வராது. 

ஆந்திராவை பிரிக்காமல் இப்போது உள்ளபடி 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டால் எங்கள் கட்சி 30 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று, பிரதமரை நிர்ணயிக்கும் கட்சியாக மாறும். எங்களால் வெற்றி பெற முடியாவிட்டால் அவர்கள் கூறும் கருத்தை ஏற்கிறேன். இதை காங்கிரஸ் கட்சிக்கு சவாலாகவே விடுக்கிறேன். ஒருங்கிணைந்த ஆந்திரா என்ற முடிவில் இருந்து நான் ஒரு போதும் பின்வாங்க மாட்டேன். 

இவ்வாறு அவர் கூறினார். 

Sunday 1 December 2013

ழ. நெடுமாறனின் விமர்சனத்திற்கு கருணாநிதி காட்டமான பதில்!

Sunday 1 December 2013 - 0 Comments

ழ. நெடுமாறனின் விமர்சனத்திற்கு கருணாநிதி காட்டமான பதில்!

Wednesday 5 December 2012

nil1

Wednesday 5 December 2012 - 0 Comments

nil

Monday 5 December 2011

Nil

Monday 5 December 2011 - 0 Comments

Nil

Featured Post 2

முக்கிய செய்திகள்

Subscribe

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 tamil news. All rights reserved.
Designed by SpicyTricks